நிரல்
ஒக். 02 15:02

மட்டக்களப்பு வாகனேரியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் கையளிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு வாகனேரியில் கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தால் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கும், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறி மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலளார் பிரிவுக்குட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஐந்து சிறிய கிராமங்கள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. வாகனேரி தமிழ் கிராமத்தில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, சுற்றிவளைப்பில் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் என்று 87 தமிழ், இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
செப். 28 21:34

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடம்- உறவினர்கள் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம்) விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உணவு தண்ணீர் எதுவுமே இன்றி வெறுமனே ஜீவனியை மாத்திரமே கைதிகள் உட்கொள்வதாகவும் மருத்துவ உதவிகளைக் கூட அவர்கள் மறுப்பதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
செப். 28 14:17

வலிகாமம் வடக்கு குரும்பசிட்டியில் உள்ள கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணியில் தொடர்ந்தும் இலங்கை இராணுவம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டிப் பிரதேசத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணி, பொது மக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படும் என இலங்கை இராணுவம் உறுதியளித்திருந்தது. ஆனால் குறித்த காணி, தொடர்ந்தும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது. 28 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உயர் பாதுகாப்பு வலையமாகவும் பிரகடணம் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் குறித்த காணி கையளிக்கப்படும் என யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகனிடம் இலங்கை இராணுவம் உறுதியளித்திருந்து. யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஏலவே இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் காணிக்குள் செல்லவிடாது இராணுவத்தினர் கம்பி வேலிகளை அமைத்துள்ளதாக கூட்டுறவுச் சங்க நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
செப். 28 10:37

மட்டக்களப்பு கோறளைப்பறு தெற்கு கிரான் பிரதேசத்தில் கால்நடைகள் திருட்டு- பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியில் கால்நடைகளுக்கும் அவற்றை மேய்ப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பறு தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்ட மைலத்தமடு, மாதவணை, பெரிய மாதவணை ஆகிய இடங்களில் கால்நடைகள் மேய்க்கப்படுகிறன. இனம் தெரியாதவர்களினால் இரவில் கால்நடைகள் திருடப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கக்கிழமை இரவு வாடிக்கு வந்த இனம் தெரியாத ஐந்து நபர்கள், உறங்கிக் கொண்டிருந்த பண்ணையாளர் ஒருவரைப் பிடித்து மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, மற்றொருவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் குறித்த பண்ணையாளர் கூ்ச்சலிட்டதால் பக்கத்து வாடிக்காரர்கள் உசாரடைந்தனர்.
செப். 27 22:38

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னாரில் அடையாள உண்ணாவிரதம்

(மன்னார், ஈழம்) கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறை்ச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக மைத்திரி- ரணில் அரசாங்கம் பல தடவை வாக்குறுதி வழங்கியிருந்தது.
செப். 27 15:34

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று வியாழக்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. காலி முகத்திடலில் உள்ள இலங்கை ஜனாதிபதியின் செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றமையினால் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. கலகமடக்கும் இலங்கைப் பொலிஸார், கம்பிகளினால் செய்யப்பட்ட வேலிகளை அமைத்து ஜனாதிபதி செயலகத்துக்குப் பாதுகாப்பு வழங்கினர்.
செப். 27 09:29

நெடுந்தீவில் குதிரைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி- இலங்கை மரபுரிமைத் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகின்ற போரின் இறுதிக்கட்டத்தின் பின்னரான காலப்பகுதியில் அதாவது 2009 ஆம் ஆண்டின் பின்னர், ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் சூறையாடப்பட்டு அவற்றை இல்லாதொழிக்க முயற்சி திட்டவட்டமாக இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் காலங்காலமாக வசிக்கும் குதிரைகள் பராமரிப்பின்மையால் அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். தாயகத்தில் உள்ள வளங்கள் அனைத்தும் இலங்கை இராணுவத்தினர் உட்பட குடியேற்றப்பட்ட சிங்கள மக்களினால் சுரண்டப்படும் நிலையில் இருக்கின்ற வளங்களையும் பாதுகாக்கத் தவறினால் பாரிய ஆபத்து எற்படும் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
செப். 26 18:44

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பாடசாலைக்கு நிரந்தர கட்டடமும் அடிப்படை வசதிகளும் இல்லை

(மட்டக்களப்பு, ஈழம்) தென்னிலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் போரினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை என பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் தி.லோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய புல்லுமலை மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிக நீண்ட காலமாக நிரந்தக் கட்டடம் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவருவதாக அவர் கூர்மை்ச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
செப். 26 14:56

மக்களின் மனப் பதிவுகளை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு நீராகாரம் எதுவுமின்றி தன்னுயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட புலம்பெயர் நாடுகளெங்கும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எவ்வித கட்சி பேதங்களுமின்றி - முன்னுரிமைகளின்றி நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
செப். 26 14:11

இலங்கைக்கு அமெரிக்கா 480 மில்லியன் நிதியுதவி- பூகோள அரசியல் வியூகத்தின் மற்றுமொரு ஏற்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் திருகோணமலையின் கடல்ப் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் இந்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை வழங்க தானகவே முன்வந்துள்ளது. மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற பயிற்சிகளை இலங்கைக் கடற்படைக்கு திருகோணமலைக் கடற்பரப்பில் வழங்கியிருந்தன.