கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
ஜூலை 21 15:30

ஆதாரங்கள் இருந்தும் விசாரனைகளை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி? தமிழக் கட்சிகள் மௌனம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களின் மண்டையோடுகள் பாற்பற்களுடன் மீட்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். 37 ஆவது நாட்களாக இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியின்போது சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் இருந்ததாகவும் ஆகவே சடலங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை எனவும் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, கூறுகின்றார். களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.
ஜூலை 18 15:51

இலங்கைப் படையின் முன்னாள் உயரதிகாரி சரத் வீரசேகர கொலை மிரட்டல்- சிவில் சமூக அமைப்புகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்படுவதை முற்றாகவே நிரகரிக்கும் வகையில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கேற்ற முறையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. போருக்கு முன்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனைகள் இருந்ததில்லையென விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கூறிய பின்னர், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. விஜயகலா சிங்களக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருடைய உரையில் சொல்லப்பட்ட விடங்கள் உண்மையானவை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியாயப்படுத்தினார். இதனால் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்ற 17 ஆம் திகதி அவரை விசாரணைக்கும் உட்படுத்தியிருந்தனர்.
ஜூலை 09 10:39

ஜெனீ்வாவை திருப்திப்படுத்தி இலங்கைப் படையினரைக் காப்பாற்ற முயற்சி- உறவினர்கள் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் கொழும்பை மையப்படுத்தி செயற்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அறியும் அலுவலகம், ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில் செயற்படுவதாக இடதுசாரி முன்னணியின் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். போரின் போதும், போரின் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பற்றிய தகவல்களை பெறுவதை விட, இலங்கைப் படையினரைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்த அலுவலகம் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜூலை 07 22:54

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்த மூலத்தை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு சீனா 7.6 மில்லியன் ரூபாய்கள் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் கடந்த 25 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி பின்னரே மஹிந்த ராஜபக்க்ஷவும் மறுத்திருந்தார். சீன அரசாங்கமும் அதிகாரபூர்மாக அந்தச் செய்தியை நிராகரித்தது. இந்த நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையிடம் இருந்து ஆதாரங்களைக் கோரியுள்ளது. நிதி வழங்கல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக குறித்த செய்தி தொடர்பான அடிப்படை மூலங்கள் அவசியம் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 03 23:51

விஜயகலா பேசியதைத் தமிழர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை- ஆனால் கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறிய கருத்து, முன் சிந்தனையில்லாத தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதை தென்னிலங்கையில் உள்ள சில பிரதான சிங்கள அரசியல்வாதிகளுக்குப் புரியும். ஆனாலும், அவசர அவசரமாக விஜயகலாவை அமைச்சுப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவிட்டு, இலங்கைச் சட்ட மா அதிபர் மூலமாக விசாரணை நடத்த எடுக்கப்பட்ட முடிவு பௌத்த சிங்கள பேரினவாத கண்ணோட்டத்துடன் அமைந்ததாகவே கருதப்படுகின்றது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மேலும் பாதுகாக்கும் நேக்கில் கட்சி வேறுபாடுகள் இன்றி சிங்கள பௌத்த பேரினவாதம் ஒன்று சேர்ந்து எடு்க்கும் நடவடிக்கை என இலங்கை நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.
ஜூன் 29 08:41

தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கியதேசியக் கட்சி- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) அடுத்த ஆண்டு முற்பகுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன முற்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 23 22:35

கோதபாஜவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வா?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் இராணுவ ஆட்சியை மகாநாயக்க தேரர்கள், பௌத்த அமைப்புகள் விரும்புகின்றனவா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி, தற்போதைய அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கியதேசியக் கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கியது ஒரு சக்தி. ஆனாலும் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். சரத்பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிந்தது என்றால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் நிறுத்த முடியாது என மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புகள் தீவிரமாக யோசிப்பது வெளிப்படையாகிறது.
ஜூன் 20 16:01

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்கள்

(வவுனியா, ஈழம் ) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை பிரிக்கும் நோக்கில், இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகும். 1949 ஆரம்பிக்கப்பட்ட அல்லைத்திட்டம், 1950 இல் உருவாக்கப்பட்ட கந்தளாய் திட்டம், 1954இல் பதவியாத்திட்டம், முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொறவேவாத்திட்டம், பெரியவிளாங்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1979 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்ட மகாதிவூல்வௌ திட்டம் என்ற சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில், பிரதேசங்களை தூண்டு துண்டாக உடைக்கும் நோக்கம் கொண்டவை.
ஜூன் 13 08:42

தமிழ் முஸ்லிம் முரண் நிலையைத் தூண்டி, உரிமைப் பயணத்தைச் சிதைக்கச் சில்லறைச் சதி

(வவுனியா, ஈழம்) ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரயத்தனமும், அதற்கு ஏதுவாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஊக்குவிப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பிரபல கல்வியாளர்களும், தமிழ்ச் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர். இந்துசமய விவகாரப் பிரதியமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களான கலாநிதி கே.ரி கணேசலிங்கம், கலாநிதி எஸ்.ரகுராம், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் மற்றும் சட்டத்தரணிகளான காண்டீபன், சத்தியகுமார் ஆகியோர் கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனிடையே இந்த நகர்வுகளின் பின்னணிகள் பற்றிய அறிவின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
ஜூன் 11 08:02

இலங்கை பிரதான மூலோபாய அமைவிடம் என்கிறார் சீன வங்கி முகாமையாளர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசுக்கான மூலோபாய அமைவிடமாகவும் ஏனைய வர்த்தக செயற்பாடுகளுக்கும் இலங்கையை சீனா, தனது பிரதான மையமாக மாற்றி வருவதாகவும் கூறியுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி ரணில் அரசாங்கமே அதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேதான் சீன முதலீடுகளுக்கான அதிகளவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்