நிரல்
ஓகஸ்ட் 06 19:01

அரசியல் செல்வாகினால் சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதியா? ஜீபனோபாயத் தொழில் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர் தாயகமான மட்டக்களப்பு வாகனேரிக் குளத்தில் சிலர் சட்டவிரோத மீன்பிடி நடடிக்கைகளில் ஈடுபடுவதால், அக்குளத்தை நம்பி ஜீபனோபாயத் தொழில் செய்யும் ஏனைய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக வாகனேரி மீன்பிடிச் சங்கத்தின் செயலாளர் வி.ஓவியராசா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாகனேரிக் குளத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு தொழி்ல் நடைபெறுகின்றது. அதனை நம்பி இரு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது ஜீபனோபாயத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அதிகமான தமிழக் குடும்பங்கள் இந்த வருமானத்தை நம்பியே வாழ்கின்றன.
ஓகஸ்ட் 06 18:48

தமிழர்களைப் பதிவு செய்யுமாறு இலங்கைப் பொலிஸாரால் படிவங்கள் கையளிப்பு- நிறுத்துமாறு அமைச்சர் மனோ உத்தரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) போர்க்காலத்தைப் போன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் அருகில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என இலங்கைப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரில் ஈழத்தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, மற்றும் கடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் தம்மை பதிவு செய்ய வேண்டும் என இலங்கைப் பொலிஸார் கூறியிருந்தனர். கடந்த சில தினங்களாக விண்ணப்படிவங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மனே கணேசனிடம் முறையிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 06 15:14

எதிர்ப்பு வெளியிட்டு கிளங்கன் மக்கள் ஆர்ப்பாட்டம்- தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மீதும் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் மலையகத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் கீழ் உள்ள கிளங்கன் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் 30 ஏக்கர் நிலப்பரப்பை, வெளியாருக்கு பங்கீடு செய்து விற்பனை செய்யப்படும் நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்ட தமிழ் மக்கள ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஹற்றன் நோர்வூட் பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த 30 ஏக்கர் காணியும் கிளங்கன் தோட்டத்துக்குச் சொந்தமானது என மக்கள் கூறுகின்றனர். பரம்பரையாக வாழ்ந்து வந்த மண் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஓகஸ்ட் 05 18:41

மாங்கேனியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை- பாதிக்கப்பட்டவர்கள் பரிதவிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில், காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் வறட்சியின் போது விவசாயிகள் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்கு எவ்விதமான நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை என மாங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் நா.உதயன் தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி பகுதியில் 450க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்காணி மழையை நம்பியதாக பெரும்போக செய்கை பண்ணப்பட்டது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் இப்பகுதியில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் பெரும் நட்டத்தை எதிர்நோக்கினர்.
ஓகஸ்ட் 05 02:50

தமிழக அரசின் ஊடக அடக்குமுறை தொடர்பாக டில்லியில் விளக்கமளிப்பு-பாசிசம் தொடருவதாகவும் குற்றச்சாட்டு

(சென்னை, தமிழ்நாடு) தமிழகத்தின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் தொடரும் அடக்குமுறைகளை, ஜனநாயகத்திற்கு எதிரான போக்கை, இந்திய ஒன்றிய முழுமைக்கும் விளக்கவும், நேச சக்திகளை ஒன்று திரட்டவும் தமிழக கள செயற்பாட்டாளர்கள் கூட்டாக, ஓகஸ்து 4 ஆம் நாள், டெல்லியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். இதில், சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, காவல்துறையின் வன்முறை, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 04 19:44

பொதுத்தேவைக்கென ஒதுக்கப்படும் நிலங்கள் அபகரிப்பு-பாதிக்கப்படும் வாகனேரிக் கிராமம்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கில், பொதுத்தேவைக்கென ஒதுக்கப்படும் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்வதனால் குறித்தத் திட்டங்களை நிறைவேற்றமுடியாமல் உள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் கி.கிருபராசா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சூடுபத்தியசேனை பகுதியில் திண்மக்கழிவு நடவடிக்கைக்காக ஐந்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட காணியில் மூன்று ஏக்கர் காணியில் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சில சகோதர இனத்தவர்கள் அத்துமீறி வேலிபோட்டுள்ளதால், திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு நிலப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் கிருபராசா கூர்மை செய்தித்தலத்திற்கு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 04 14:08

நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்- சட்டத்தரணி காண்டீபன்

(வவுனியா, ஈழம் ) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர சபையின் அமர்வுகளில் பங்கேற்க இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில், சட்டப்பிழைகள் இருப்பதாக சட்டத்தரணி கான்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் குருநகர் இலக்கம் 19 சென் பற்றிக்ஸ் வீதி குருநகர் பிரதேசத்தில் வசிக்கும் ஸ்ரிபன்சன் றொனால்டன் என்ற வாக்காளர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் இந்த மனுதாரரின் சார்பில் முன்னிலையாகி வாதாடினார்.
ஓகஸ்ட் 03 15:54

மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் 440 பொதிகளில் பாதுகாக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம்) வடமாகாணத்தின் மன்னார் நகர நுழைவாசலில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலைய வளாகத்தில், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று வெள்ளிக்கிழமை 47ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது. போர்க்காலத்துக்குரியதாக சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து இதவரை 66 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 56 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக எடுக்கப்பட்டு சுத்தம் செய்ய்ப்பட்டுள்ளன. 440 பைகளில் இந்த மனித எலும்புக் கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாக்கப்படுவதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறியுள்ளார்.
ஓகஸ்ட் 03 08:50

பதவி கவிழ்க்கும் மஹிந்த அணியின் எதிர்ப்புப் போராட்டத்தில் பெளத்த பேரினவாதிகள் பங்கேற்பு- கொழும்பு ஊடகங்கள்

மேற்குலக நாடுகளினால் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் முதலாவது மக்கள் போராட்டத்தை இல்ங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் ஆரம்பித்துள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் போரை நடத்தி இன அழிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச ஆட்சியாளர்கள் ஒன்று கூடி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், பெருமளவு சிங்கள பௌத்த பேரினவாதிகள் கலந்துகொண்டதாகக் கொழும்பு ஊடகங்கள் கூறியுள்ளன. ஜனபல சேன என்ற சிங்களப் பெயரிலான இந்த எதிர்ப்புப் பேரணி, தொடர்ச்சியாக இலங்கையின் சகல பகுதிகளிலும் நடைபெறும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இந்தப் பேரணி நடைபெற்றது.
ஓகஸ்ட் 02 19:57

வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தில் மட்டக்களப்பு நாசிவன்தீவு புறக்கணிப்பு- மீன்பிடிச் சங்கத் தலைவர்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்களை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மீன்வளர்ப்புத் திட்டத்தை நீரியல் வள அமைச்சின் நிதி உதவியுடன் பிரதேச செயலகம் நடைமுறைப்படுத்தியத் திட்டம் ஒரு சமூகத்தை மாத்திரம் சார்ந்து இடம்பெறுவதாக நாசிவன்தீவு கிராம மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் ம.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.