நிரல்
ஒக். 02 15:02

மட்டக்களப்பு வாகனேரியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் கையளிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு வாகனேரியில் கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தால் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கும், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறி மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலளார் பிரிவுக்குட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஐந்து சிறிய கிராமங்கள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. வாகனேரி தமிழ் கிராமத்தில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, சுற்றிவளைப்பில் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் என்று 87 தமிழ், இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஒக். 01 14:44

மைத்திரி ரணில் அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை- கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) வழக்கு விசாரணைகளின்றி பல வருடங்களாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்தால் நல்லிணக்கத்துக்கான சமிக்ஞை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்.
ஒக். 01 00:08

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு- மதிப்பீட்டு அறிக்கை தயாரானது

(மன்னார், ஈழம்) இலங்கை அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னோடியான மதிப்பீட்டு அறிக்கை, அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏனைய அமைச்சுக்களை விட பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது குற்றம் சுமத்தியிருந்தார்.
செப். 30 21:25

பொன்னாலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்ற போராட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. தமிழர் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருக்கும் பொன்னாலையில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செப். 30 14:37

சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை

(சென்னை, தமிழ்நாடு) இந்திய அளவில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக ஆராய 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1983 இல் அறிக்கை வழங்கப்பட்டாலும், இந்திய ஒன்றியப் பிரதமர் வி.பி.சிங்க் தான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை (50% இடஒதுக்கீடு) நிலைநாட்டினார். இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் 35-50% இடஒதுக்கீட்டையே பின்பற்றி வருகிறபொழுதும் தமிழகத்தில் 69% இருந்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றங்களில் உயர்சாதி வகுப்பினர் வழக்குத் தொடுத்து வருகிறபொழுதும் வெல்லமுடியவில்லை. அடுத்தடுத்து வரவிருக்கிற ஆபத்துக்களை எதிர்கொள்ள முழு வரலாறை அனைவரும் அறிந்துக்கொள்ளும் நோக்கில் கூர்மை சமூகநீதி வரலாற்றைத் தொகுத்து வெளியிடுகிறது.
செப். 30 14:17

போதைப் பொருட்களை கொழும்புக்குக் கடத்தும் தளமாக வடமராட்சிக் கிழக்கு- மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் முறைப்பாடு

தமிழர் தாயகமான வடமாகாணம யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். கடற் பிரதேசத்தின் ஊடாக வடமராட்சி கிழக்கு கடற்கரையில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் வேறுறொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கூறுகின்றனார். வடமரட்சி கிழக்கு கடற்கரையை போதைப் பொருட்களை இறக்குவதற்கான தளமாகப் பயன்படுத்துவதாகவும் இலங்கைக் கடற்படை மீதே சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார். வடமராட்சி கடலில் கடந்த வாரம் போதைப் பொருட்களுடன் படகு கைப்பற்றப்பட்டு சில நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
செப். 29 21:11

வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை பாதுகாப்பது தொடர்பாக வடமாகாண சபை தீர்மானம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகின்ற போரின் இறுதிக்கட்டத்தின் பின்னரான காலப்பகுதியில் அதாவது 2009 ஆம் ஆண்டின் பின்னர், ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் சூறையாடப்பட்டு அவற்றை இல்லாதொழிக்க முயற்சி இடம்பெற்றுவருகின்றது. இந்தநிலையில் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் உள்ள சவுக்கங்காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சபை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு நடைபெற்றபோதே மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை விசமிகள் எரியூட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செப். 29 19:06

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடுகள் இல்லை- உறவினர்கள் கவலை, போராட்டம் தொடர்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று சனிக்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலருக்கு எதிராக குற்றங்கள் எதனையும் இலங்கைப் பொலிஸார் ஆதாரங்களுடன் முன்வைக்க முடியவில்லை. ஆனால் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் இழுத்தடிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
செப். 29 07:53

மன்னாரில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் வரட்சியினால் விவசாயம் பாதிப்பு- நிவாரணம் வழங்க ஏற்பாடு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக ஐந்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இதனால் இந்தக் கிராமங்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான குடிநீர் விநியோகத்தை நீர்த்தாங்கிகள் மூலம் வழங்கி வருவதாக மன்னார் செயலகம் தெரிவித்துள்ளது. ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த முப்பத்தி நான்காயிரம் பொதுமக்கள் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தொடர்சியாக வரட்சி நிலவி வரும் நிலையில் குடிநீர் கிணறுகள், விவசாயக் கிணறுகள், விவசாய குளங்கள் ஆகியவை நீரின்றி காணப்படுகின்றன. அனுராதபுரத்தில் ஆரம்பமாகி மன்னார் அரிப்பு கடலில் சங்கமமாகும் அருவியாறும் நீரின்றி காணப்படுகின்றது.
செப். 28 23:14

150 ஆண்டுகால சட்டப்பிரிவுகள் நீக்கப்படுகிறது; பிரச்சனைக்குரிய பகுதிகள் திருத்தப்படுகின்றன

(சென்னை, தமிழ்நாடு) இந்திய ஒன்றிய அளவில் 150 ஆண்டுகாலத்திற்கும் மேலாக இருந்த பாலியல், குடும்ப உறவு நிலைகள் குறித்து நிலைத்து வந்த சில சட்டப்பிரிவுகளில் திருத்தமும் நீக்கமும் செய்யப்பட்டதோடு, நிகழ்காலப் பிரச்சனைகளாக இருந்து வந்த ஆதார் எண், சபரிமலை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் அதிரடியான சில தீர்ப்புகளை, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகள் தனிமனித சுதந்திரங்களை உறுதிப்படுத்தியுள்ளது; வழிப்பாட்டு தலங்களின் மீதான கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது; ஆனபொழுதும், மதவாதிகளும் அடிப்படைவாதிகளும் இத்தீர்ப்புகளுக்கு எதிராக கடும் வாதங்களையும் வைத்து வருகின்றனர்.