நிரல்
ஒக். 10 14:06

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரவும்- சிவசக்தி ஆனந்தனிடம் வேண்டுகோள்

(மன்னார், ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை நிபந்தனையாக முன்வைத்து வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் கைதிகள் கூறியுள்ளனர். கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை இன்று புதன்கிழமை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கைதிகள் கேட்டுகொண்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
ஒக். 10 10:59

காஞ்சிரன்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுட்டிப்பு

ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படையினரை அதீத பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16 ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல், அம்பாறை- திருக்கோவில் பகுதியில் அனுட்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நினைவேந்தல் இடம்பெற்றது.
ஒக். 10 00:19

மன்னார் மாவட்டத்தில் பெருமளவு காணிகள் சட்டத்திற்கு முரணாக அபகரிப்பு- மக்கள் முறைப்பாடு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் நீரேந்து பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ள பெருமளவு புலவுக்காணிகள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான குடிநிலக்காணிகளும் விவசாய நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கொழும்பு அரசியல் செல்வாக்குடன் ஒரு சில தமிழ் பேசும் அரச அதிகாரிகளும் கிராமசேவையாளர்களும் உடந்தையாக செயற்படுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகமான மன்னார் மாவட்டத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வசித்து வரும் குடும்பங்களின் காணிகளும் தோட்டக்காணிகளும் விவசாய நிலங்களுமே அபகரிக்கப்படுவதாக அயல் கிராமங்களில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.
ஒக். 09 15:31

தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம்- புறக்கணிக்கப்படுவதாகக் கவலை தெரிவிப்பு

(மன்னார், ஈழம்) நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் சம்பளவு உயர்வு விடயத்தில் ஏமாற்றி வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியில் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தனை திம்புள்ள தோட்ட தொழிலாளர்கள் உட்பட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டனர். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஒக். 09 14:17

அனர்த்தங்களில் சிக்கி ஒன்பது பேர் பலி- 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிப்பு

(வவுனியா, ஈழம் ) வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் கடும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, பதுரலிய, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒக். 09 11:05

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடை பவனி

(யாழ்ப்பாணம், ஈழம் ) வழக்கு விசாரணைகளின்றி இலங்கைச் சிறைச்சாலைகளில் பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அநுராதபுரம் நோக்கி மாபெரும் கண்டப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டனப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் தலைமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஒக். 09 08:05

காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது

(மட்டக்களப்பு, ஈழம்) மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம் நடாத்துவதை நிறுத்தி காணியை விடுவிக்குமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.பிறேம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்திற்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாக தலைவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.பாடசாலை காணி உட்பட்ட பொதுமக்களின் காணிகள் உட்பட சுமார் நான்கு ஏக்கர் காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளது. இங்கு சுற்றுலாவிடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒக். 08 16:15

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி நடைபவனி

(யாழ்ப்பாணம், ஈழம் ) வழக்கு விசாரணைகளின்றி இலங்கைச் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாபெரும் கண்டப்போராட்டத்துடன் கூடிய நடைபவனியில் குதித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒக். 08 12:58

விஜயகலா கைதாகி பிணையில் விடுதலை-தேர்தலை நோக்கிய ஐக்கியதேசியக் கட்சியின் நாடகம் என்கிறது தமிழ்த் தரப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன் சென்றிருந்தார். அங்கு வாக்குமூலம் வழங்கியபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.
ஒக். 07 18:28

கடும் மழையினால் ஐந்துபேர் பலி- எட்டு இலட்சத்து மூவாயிரத்து 516 பேருக்குப் பாதிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் தொடந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 940 குடும்­பங்­களைச் சேர்ந்த 8 இலட்சத்து மூவாயிரத்து 516 பேர் பாதிப்­புக்­கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையினால் மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் கார­ண­மாக 6 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் ஆயிரத்து 46 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ள­தாக இலங்கை இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.