நிரல்
மே 20 16:17

நல்லாட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார் மைத்திரி

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதால் நல்லாட்சி என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டுள்ள அரசாங்கத்தின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென கொழும்பு ஊடக வட்டாரங்கள் கூர்மை இணையத்தளத்திற்குத் தெரிவித்தனர்.
மே 19 23:22

யாழ் பிரபல தவில் வித்துவான் யமுனா ஏரியில் சடலமாக மீட்பு

(வவுனியா, ஈழம்) தமிழ் இசை உலகின், பிரபல தவில் வித்துவான் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை யாழ் நல்லூர் யமுனா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ் கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
மே 19 15:57

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான், போன்ற பல பிரிவுகளில் வாழும் மக்கள் கட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கி பெரும் துயரங்களை அனுபவிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
மே 19 15:29

தொழிற் சங்கங்கள் கடும் எதிர்ப்பு, போராட்டம் நடத்த முடிவு

(வவுனியா, ஈழம்) இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை சிங்கப்பூர் அரசாங்கத்துடனான சுதந்திர வர்த்தக அபிவிருத்தி உடன்படிக்கை ஆகியவற்றுக்கு அரச மருத்தவர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 12 தொழிற் சங்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூர்மையின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.
மே 19 00:27

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு; கொழும்பில் சிறப்பு பூஜை

(வவுனியா, ஈழம்) முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க சிறப்பு பூஜை வழிபாடுகள் கொழும்பு பம்பலப்பிட்டி வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. ஒன்பது வருடங்களின் பின்னர் கொழும்பில் முதன் முதலாக இடம்பெற்ற வழிபாட்டில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
மே 18 23:08

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு; கனேடிய பிரதமர் அறிக்கை

சமாதானம், நீதி என்பவற்றை அடைவதற்காகவும், பொறுப்புக் கூறல், நிலைமாறு கால நீதி, மற்றும் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாத நிலையை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பன தொடர்பாக சர்வதேச சமுகத்திற்கும், இலங்கை மக்களுக்கும்; வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என கனேடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மே 18 19:01

இனப்படுகொலை என்பதை சர்வதேசம் ஏற்க வேண்டும்

(கிளிநொச்சி, ஈழம்) இறுதிப் போரின்போது சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகள் மூலம் சர்வதேச சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மே 18 17:38

உலகத்தின் மனட்சாட்சியை உலுக்கிய அழுகுரல்

(முல்லைத்தீவு, ஈழம்) இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு 11 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை இடம்பெற்றதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது என்றும் செய்தியாளர் குறிப்பிடடார்.
மே 18 15:49

பொது மக்களுக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையே தர்க்கம், மன்னாரில் சம்பவம்

(வவுனியா, ஈழம்) மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் குடும்பஸ்த்தர் ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட குழுவினர், துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை அச்சுறுத்தினர் என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
மே 18 14:26

தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழக இளைஞர்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அழுவதற்கான நாளாக கருதாமல், தமிழினம் மீண்டு எழுவதற்கான எழுச்சி நாளாக நினைவு கூர வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது. கீச்சகம் (Twitter) வழியே தொடங்கியதாக அறியப்படும் கருத்துப்படம், முகநூல் (Facebook), பகிரி (Whatsapp) வழியாக அரசியல், சமூக தளங்களில் இயங்கும் இளைஞர் மத்தியில் பரவி வருகிறது.