நிரல்
ஜூன் 08 17:07

வடமராட்சி கிழக்கில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல், தடுத்து நிறுத்துமாறு கோரி முற்றுகைப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், இலங்கை படையினரின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக தங்கியிருந்து கடல் அட்டை தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலங்கையின் தென்பகுதி சிங்கள மீனவர்களை வெளியேற்றுமாறு கோரி, இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெற்றது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசாங்கத்தின் தமிழர் தாயக பிரதேசங்கள் மீதான பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரா்கள் ஒன்று திரன்டு குரல் எழுப்பினர்.
ஜூன் 08 00:36

திருகோணமலை வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் ஐந்து பிள்ளைகளின் தாய்

(திருகோணமலை, ஈழம்) திருகோணமலையின் மூதூர் பாட்டாளிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். ஐந்து பிள்ளைகளின் தாயான அவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் பிரதேச மக்களால் திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஜூன் 08 00:27

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கொழும்புக்கு இரகசியமாக வந்து சென்றதன் பின்னணி?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு நெருக்கமான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கு வந்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துவிட்டு சென்றுள்ளதாக அமைச்சரவையின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய வருகை குறித்து கொழும்பு அரசியலில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவருடைய வருகை திடீரெனவும் இரகசியமாகவும் அமைந்ததாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 07 22:20

திருகோணமலையில் தியாகி சிவகுமாரன் நினைவுகூர்வு

(திருகோணமலை, ஈழம்) ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றின் ஓர் ஆரம்ப அத்தியாயத்துக்குரிய தியாகி உரும்பிராய் பொன் சிவகுமாரனின் 44வது நினைவாஞ்சலி நிகழ்வு ஒன்று திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் இறால் பாலத்தில் செவ்வாய் மாலை 5:15 மணியளவில் நடைபெற்றது.
ஜூன் 07 20:03

பெரிய நீலாவணை சுனாமிக் குடியிருப்பு மீள்நிர்மாணத்தில் பொலிஸ் பாகுபாடு

(மட்டக்களப்பு, ஈழம் ) மட்டு நகருக்குத் தெற்காக 39 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெரியநீலாவணையில் சுனாமியின் பின்னர் அமைக்கப்பட்ட தொடர் மாடிக் குடியிருப்பொன்றின் தலைவரான தன்மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 72 மணிநேரம் கடந்தும், தனது முறைப்பாடு தொடர்பாக கல்முனைப் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தாக்குதலுக்குள்ளான சின்னையா சத்தியமூர்த்தி கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார். பொலிஸார் அரசியற் பின்னணியில் சமூக ரீதியாகப் பாகுபாடான முறையில் இயங்குகிறார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார்.
ஜூன் 07 15:48

சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் எதுவும் இல்லை என்கிறது அலுவலகம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இறுதிக்ககட்ட யுத்தத்தில் சரணடைந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக உறுதியளிக்கவில்லையென கொழும்பில் இயங்கும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகம், மறுப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் எதுவும் தம்மிடம் இல்லையென்றும் குறித்த அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜூன் 07 12:06

பாரிய கொழும்புத் துறைமுகப் பட்டினத்துக்கு விசேட சட்டமூலம், தனியான பிரதேசமாக அங்கீகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசின் நிதியுதவியுடன் கொழும்பு போட் சிற்றி (Colombo Port City) என அழைக்கப்படும் பாரிய பட்டின நிர்மாணிப்புக்கு ஏற்ப, இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் தனியான சட்டமூலம் ஒன்று இணைக்கப்படவுள்ளது. நகல் சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை, சீன சட்ட வல்லுநர்கள் நகல் சட்ட வரைபை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சட்டமூலத்தின் ஊடாகக் கடலில் மண்ணால் நிரப்பப்பட்ட 269 ஹெக்ரேயர் நிலம் விசேட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டு தனி நிர்வாகம் ஒன்று அங்கு இயங்கவுள்ளது. கொழும்பின் அதி பிரமாண்ட வர்த்தகப் பட்டினத்தைத் தீர்மானிக்கும் வெளிச்சக்தி எதுவோ அதுவே முழு இலங்கைத்தீவையும் கேந்திரரீதியாகக் கட்டுப்படுத்தும் என்று சீனா கருதுகிறது.
ஜூன் 06 20:05

பெரியபுல்லுமலைக் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம், இதுவரை ஏழுபேர் பலி, ஐந்துபேர் காயம்

(மட்டக்களப்பு, ஈழம்) யுத்தகாலத்தில் உயிர்களையும் உடமைகளையும் இழந்ததைப்போன்று போர் முடிவடைந்த பின்னரும் பெரியபுல்லுமலை கிராம மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அக்கிராமத்தின் விவசாய அமைப்பின் தலைவி பிரான்ஸிஸ் சரஸ்வதி தெரிவித்தார். கடந்த யுத்தகாலத்தில் பெரியபுல்லுமலை கிராமத்தில் வசித்த மக்கள் ஐந்து தடவைக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளார்கள். 250க்கும் மேற்பட்ட உயிர்களை யுத்தம் காவுகொண்டுள்ளது. அத்துடன் விலைமதிக்க முடியாதளவுக்கு உடமைகள் இழக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இழப்புக்கள் இன்னும் தொடர்ந்து இடம்பெறுவதாக சரஸ்வதி தெரிவித்தார்.
ஜூன் 06 12:25

சம்பந்தன் இரட்டை நிலைப்பாடு; ரணில், மைத்திரி, மஹிந்தவை சமாளித்தார் என்கின்றனர் அவதானிகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படலாம் என பரவலாக பேசப்படுவதால், அதற்கேற்ற முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயற்படுகின்றாரா என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, பிரதி சபாநாயகர் தெரிவில் சம்பந்தன் செயற்பட்ட முறை குறித்து நாடாளுமன்றத் தமிழ்ச் செய்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஜூன் 05 14:44

ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தால் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஒற்றையாட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரசு, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறு வலியுறுத்தி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் அனுப்புவதென, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.